Motivational Quotes in Tamil and English
Motivational Quotes in Tamil and English
உன்னை வெல்லும் தகுதி தோல்விக்கே இருக்கும் போது, தோல்வியை வெல்லும் தகுதி உனக்கு இல்லாமலா போய்விடும்.
When failure deserves to overcome you, can’t you overcome loss?
எப்போதும் தோல்வி அச்சத்தில் இருப்பதை விட, முயற்சி என்ற ஆபத்தை ஒரு முறை எதிர்கொள்வதே மேல்.
Rather than continually fearing failure, better try facing the challenge once.
மதி கொண்டு முயற்சித்தால் விதி என்று ஏதுமில்லை இங்கு.
If you try with wisdom, there is nothing called fate here.
முயன்று கொண்டே இரு, தோல்வி உன்னிடம் மண்டியிடும் வரை.
Keep trying until failure kneels before you.
மற்றவர்கள் தோள் மீது ஏறி நின்று தன்னை உயரமாக காட்டிக் கொள்வதை விட தனித்து நின்று, உங்கள் உண்மையான உயரத்தை காட்டுவதே தன்னம்பிக்கை.
Rather than showing you tall by standing on others shoulders, Stand alone. Self-confidence is about showing your actual height.
சாயலில் வெற்றி பெறுவதை விட அசல் தோற்றத்தில் தோல்வி அடைவது நல்லது.
It is better to fail at the original appearance than succeed at the seam.
எதிரி இல்லை என்றால் இன்னும் நீ இலக்கை நோக்கி பயனிக்கவில்லை என்று அர்த்தம்.
If there is no enemy, then it means yet you are not working towards the goal.
விடாமுயற்சி என்ற ஒற்றை நூல் சரியாக இருந்தால் வெற்றி எனும் பட்டம் நம் வசமே.
If you have a single thread of perseverance, you can quickly achieve the kite of success.
ஒரு நாள் விடியும் என்று காத்திருக்காமல் இன்றே முடியுமென முயற்சி செய், வேதனைகளும் வெற்றிகளாக மாறலாம்.
Try as much as you can today without waiting for the day to dawn, and the pains can turn into successes.
எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம் என்னால் முடியும்.
‘I can do it’ is something you must always pronounce in your mind.
முதல் முயற்சி தோல்வி என்றால் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள், தோல்வியை வென்றுவிடலாம் வெற்றியால்.
If the first attempt fails, please try again; failure can be overcome by success.
பிரச்சனைகள் நம்மை செதுக்க வருவதாக நினைத்து எதிர் கொள்ளுங்கள், சிதைந்து போக மாட்டீர்கள்.
Remember that problems come to carve us, then you will never feel low.
No comments:
Post a Comment